மொடக்குறிச்சி,ஆக.30: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,203 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.61.79 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.72.32 காசுக்கும், சராசரி விலையாக ரூ.68.20 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 38 ஆயிரத்து 661 கிலோ எடையுள்ள நிலக்கடலை ரூ.25 லட்சத்துக்கு விற்பனையானது.