சிவகாசி, ஆக.5: சிவகாசி மாநகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார். விருதுநகர் – திருத்தங்கல் சாலையில் ரூ.3 கோடியே 1 லட்சம் மதிப்பில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில் சேரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள், ரப்பர், நெகிழி, மரக்கட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணிகளையும், ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு பணி திட்டம் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியினையும், செல்லியம்மன்கோவில் ஊரணியில் ரூ.61 லட்சம் மதிப்பில் தூர்வாருதல், கரையை பலப்படுத்தி, நடைபாதை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், மாநகராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை, கழிப்பறை மற்றும் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், பொறியாளர் சாஹூல் ஹமீது, தாசில்தார் லோகநாதன், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.