Wednesday, February 28, 2024
Home » சிவகாசி-கன்னிசேரி சாலையில் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சிவகாசி-கன்னிசேரி சாலையில் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

by Ranjith

 

சிவகாசி, ஜன.6: சிவகாசி-கன்னிசேரி சாலையில் வாகன விபத்தை தவிர்க்க போக்குவரத்து எச்சரிக்கை போர்டுகள் வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி – கன்னிசேரி சாலை குண்டும் குழியமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருந்தது. மத்திய அரசின் கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தில் இந்த சாலை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து கன்னிசேரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.

இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் வாகனங்களும் இந்த சாலை வழியாக செல்கின்றன. அதே போல் துலுக்கபட்டியில் உள்ள தனியார் சிமின்ட் தொழிற்சாலைக்கு ஏராளமான கனரக வாகனங்கள் மூலப்பொருட்களை ஏற்றி கொண்டு இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் இரவு நேரங்களிலும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். தற்போது புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் சென்று வருகின்றன.

இந்நிலையில் இந்த சாலையில் தற்போது இரண்டு இடங்களில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்படாததால் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையில் வெள்ளை நிற கோடுகள், தகவல் பலகை எதுவும் வைக்கவில்லை. இங்கு பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும் நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். இதே போன்று இந்த சாலையில் கன்னிசேரி அருகே தரைப்பாலம் உள்ளது. இங்கு சாலையின் முடிவில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாததால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கன்னிசேரி விலக்கில் உள்ள திடீர் வளைவு சாலை தெரியாமல் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் சிவகாசி- கன்னிசோி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் சாலையில் எச்சரிக்கை போர்டுகள் வைத்திட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

13 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi