சிவகாசி, செப்.3: சிவகாசி கோட்டத்தில் அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வழக்கமான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மின்விநியோகம் தடைபடும் என்று மின்வாரிய அதிகாரி பத்மா தெரிவித்துள்ளார்.