சிவகாசி, ஜூன் 13: சிவகாசி மாநகராட்சியில் மூன்றாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் சரவணன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இதில் நகரில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றம் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் சரவணன் எச்சரித்துள்ளார்.