Tuesday, February 27, 2024
Home » சிவகங்கை மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டத்தில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

by Ranjith

 

சிவகங்கை, ஜன.8: முதலீட்டாளர்கள் சிவகங்கை மாவட்டத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என கலெக்டர் வேணடுகோள் விடுத்தார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நேரலை நிகழ்வை கலெக்டர் ஆஷாஅஜித் மற்றும் சுய தொழில் சங்கங்கள், சுயதொழில் மேம்பாட்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து கலெக்டர் தெரிவித்ததாவது: 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ பல்வேறு சிறப்பம்சங்களுடன் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இம்மாநாடு நடைபெறுகிறது.

முதலீட்டாளர்கள் மாநாட்டின் முன்னோடியாக அனைத்து மாவட்டங்களிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தங்களது தொழில் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள இலக்கீட்டினை எய்திடும் வகையிலான நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டமும் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

இதில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அந்தந்த மாவட்டங்களில் தொழில் முனைவோர்கள், தங்களது தொழில் முதலீடுகளில் மேலும் ஈடுபடுவதற்கு அடிப்படையாக அக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. சிவகங்கை மாவட்டத்திலும் அந்நிகழ்வின்போது, ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டது. எனவே புதிதாக தொழில் தொடங்கவிருக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் இம்மாவட்டத்தில் தங்களது முதலீடுகளை செய்து, மாவட்டத்தை வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவெடுப்பதற்கு அரசுடன் இணைந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

16 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi