சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பகலில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்தது. அதன் பிறகு மழை இல்லை. பிப்.15ம் தேதியில் இருந்து தற்போது வரை கடுமையான வெயில் அடித்து வருகிறது. கடந்த மாதம் 25 மற்றும 26 ஆகிய தேதிகளில் திடீரென மழை பெய்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. பகல் முழுவதும அவ்வப்போது பெய்த மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் அவதியடைந்தனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடுமையான வெயில் அடிக்கும் கோடை காலத்தில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திடீர் மழை; மக்கள் ‘குஷி’
0
previous post