சிவகங்கை, ஆக. 17: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளின் பெற்றோர்கள் கொடியேற்றினர். பள்ளிச் செயலர் சேகர், தலைமையாசிரியர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். சிவகங்கை அருகே சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளித்தாளாளர் முத்துக்கண்ணன் கொடியேற்றினார்.
மருத்துவர் சேதுபதி, ஊராட்சிமன்றத்தலைவர் சேதுபதி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சிவகங்கை கேஆர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் சரவணன் கொடியேற்றினார். 21ம் நூற்றாண்டு சர்வதேச மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ மாணவர் முகமதுஇர்பான் கொடியேற்றினார். அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாட்டரசன்கோட்டை கேஎம்எஸ்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினிகவிராஜ் கொடியேற்றினார். தலைமையாசிரியை(பொ) மீனாட்சிசுந்தரி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சிக்கல்லூரி முதல்வர் சக்திவேல் கொடியேற்றினார். விரிவுரையாளர்கள் மணிகண்டன், சேவுகமூர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். சிவகங்கை கிராம நிர்மான சேவா சங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் கொடியேற்றினார். நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.