Thursday, December 7, 2023
Home » சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்

by Ranjith

சிவகங்கை, அக். 7: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு குழு தலைவர், கார்த்திசிதம்பரம் எம்பி தலைமை வகித்து பேசியதாவது: தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் அபிவிருத்தி திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.

இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தமிழரசிரவிக்குமார், மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தலைவர் சேங்கைமாறன், நகர் மன்றத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?