சிவகங்கை, பிப். 26: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூலம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு, வருவாய், ஊரகவளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சகாய தைனேஸ், ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராம்குமார் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன், கோவிந்தராஜ், தயானந்தன், ராஜா, கண்ணதாசன், மனோகர், மலைராஜ், ரவி, தமிழரசன், பீட்டர், ராமராஜன், கணேஷ், டேவிட்அந்தோணிராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினர்.