சிவகங்கை, நவ.28: சிவகங்கை 48காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை, காய்ச்சல் பரவல் தடுப்பிற்காக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்து மாணவ,மாணவிகள், ஆசிரியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், சரவணன் மற்றும் டெங்கு ஒழிப்பு கண்காணிப்பாளர் சித்ரா, டிபிசி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில் கபசுர குடிநீர் வழங்கல்
0
previous post