சிவகங்கை, மே 30: சிவகங்கையில் இன்று திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக மாவட்ட செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில்: ‘‘திமுக சிவகங்கை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சிவகங்கை ராயல் மகாலில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா, மதுரை பொதுக்குழுவிற்கு செல்லுதல், பிஎல்சி சரிபார்த்தல், கழக வளர்ச்சி பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில சார்பு அணி நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.