திருப்பூர், ஆக.20: புதுச்சேரியில் சர்வதேச அளவில் ஓப்பன் சிலம்பம் சேம்பியன் சிப் போட்டி ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த மின்னல் சிலம்பம் அகாடமி சார்பில் தலைமை ஆசான் ஜெயசந்திரன் மற்றும் ஆசான் விக்னேஸ்வரன் திருக்குமரன் நகர் மற்றும் படியூர் சிலம்பம் வீரர், வீராங்கனைகளை கொண்ட குழுவினர் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளார்.
இந்நிலையில் வெற்றி பெற்றவர்கள் பலவஞ்சிபாளையத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் 57வது வார்டு கவுன்சிலரும், பொது சுகாதார குழு தலைவருமான கவிதா மற்றும் பகுதி செயலாளர் கோவிந்தராஜ், 57வது வார்டு செயலாளர் நேதாஜி கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.