புழல், ஆக.3: பள்ளிக்கரணை நாராயணமூர்த்தி நகரை சேர்ந்த கமலக்கண்ணன்(46), மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மே மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, இவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறை கைதி மரணம்
previous post