அரூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரூர் கிளை சிறையில், தீபம் தொண்டு நிறுவனம் மூலம் கைதிகளுக்கு ஆர்டிஓ வில்சன் ராஜசேகர் புத்தகங்களை வழங்கினார். அதனை சிறை கண்காணிப்பாளர் அருண்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது, அரூர் சிறையில் நூலகம் அமைக்க நடடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தீபம் தொண்டு நிறுவனம் கற்பகவல்லி நன்றி தெரிவித்தார்.