பெரியபாளையம், ஜூலை 2: சிறுவாபுரி முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 4மணி பக்தர்கள் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமையான நேற்று பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து, காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 4மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறுவாபுரி கோயிலில் அலைமோதிய கூட்டம்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
0