அரியலூர், ஆக.11: அரியலூர் அடுத்து சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வானவியல் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். வானவில் மன்ற தூதுவர் ஆர்த்தி கலந்து கொண்டு, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு எளிமையான முறையில் கற்றல், கற்பித்தல் மற்றும் மலிவான விலையில் உபகரணங்களை செய்துக் காட்டினார். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் உங்களால் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும் என்று அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, கோகிலா, தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.