அரியலூர், ஜூலை 16: சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். கணித ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி வரவேற்றார். இதில், அறம் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி நமச்சிவாயம் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அகிலா முன்னிலை வகித்தார். அறம் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகிகள் அருள், ராஜசேகரன், மணி, அருண்குமார், கோவிந்தராஜ், சில்ட்ரன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் நிக்கில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.