உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி முடிந்து சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக, டூவீலரில் போதையில் வந்த பழனி (40), அலெக்ஸ்பாண்டி(42), மற்றும் ரவி ஆகியோர் சிறுவர்களை வழிமறித்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மீண்டும் அதே வழியாக வந்த பழனி மற்றும் அலெக்ஸ் பாண்டியை பிடித்து தர்ம அடி கொடுத்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், புகைப்படம் எடுத்த செல்போனுடன் தப்பி சென்ற ரவி என்பவரை தேடி வருகின்றனர்.