ஜெயங்கொண்டம், ஆக. 3: உடையார்பாளையம் அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பருக்கல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் வசந்த் (17). இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், சற்று மனநலம் பாதித்து குடிப்பழக்கமும் இருந்து வந்தது. வசந்த், பருக்கல் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வசந்தின் அக்கா சுவாதி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.