தேன்கனிக்கோட்டை, நவ.16: தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை தெருவைச் சேர்ந்த 17வயது சிறுவன், வெல்டிங் வேலை செய்து வருகிறான். கடந்த 12ம் தேதி இரவு, தீபாவளி பண்டிகையின் போது, தேன்கனிக்கோட்டை கோகுல் தெருவைச் சேர்ந்த கோகுல்வினித் (28) மற்றும் அவரது நண்பர்களான அபிஷேக் (22), நவீன் (20) மற்றும் கித்துவாய் தெருவை சேர்ந்த ஸ்ரீ(22) ஆகிய 4 பேர், மேல்கோட்டை தெருவில் பட்டாசு வெடித்தனர். அப்போது, அப்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கோகுல்வினித் மற்றும் அவரது நண்பர்கள் தீப்பெட்டி கேட்டனர். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோகுல்வினித் மற்றும் அவரது நண்பர்கள், சிறுவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் சிறுவன் புகார் செய்தார். இதையடுத்து கோகுல் வினித் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நவீன் மற்றும் ஸ்ரீ ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.