ஜெயங்கொண்டம், ஆக.18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (24). இவர், 17 வயதுடைய ஒரு சிறுமியை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்ததாகவும் சிறுமி வீட்டாரிடம் பெண் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வன் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரிக்கின்றனர்.