செஞ்சி, மே 25: மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சதீஷ் (27). இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 15.9.2024 அன்று கோயிலில் திருமணம் நடந்தது .இந்த நிலையில் சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறார். இது பற்றி தகவல் அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் மலர்கொடி கப்ளாம்பாடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 18 வயது நிறைவடையாத சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதும் அவர் கர்ப்பமாக இருப்பதும் உறுதியானது. இது குறித்து அவர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் சதீஷ், அவரது தந்தை வெங்கடேசன், தாய் பூங்காவனம், உறவினர் யசோதா ஆகிய நான்கு பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
0
previous post