திருமங்கலம், ஆக. 2: திருமங்கலம் அருகே, 14 வயது சிறுமியை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட வாலிபர் மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள மொச்சிகுளத்தினை சேர்ந்தவர் மருதலிங்கம் (24). இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் கட்டிடபணிக்கு சென்ற போது, அங்கிருந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் சிறுமிக்கு 18 வயது ஆகாததை அறிந்த ஊழியர்கள், அது குறித்து கள்ளிக்குடி சமூக பாதுகாப்பு திட்ட ஊரக அலுவலர் முத்துலட்சுமியிடம் தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்து புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மருதலிங்கத்தின் மீது போச்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.