செஞ்சி, செப். 3: செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10வது படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரது தாயாரின் தம்பியும் பெருவளுர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மகனுமான ரவிச்சந்திரன் (23) என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற போது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு சிறுமியை திருப்பதிக்கு அழைத்து சென்று காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்துள்ளார். பின்னர் பெருவளூருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திய போது சிறுமி கர்ப்பமானதால் பிரசவத்துக்காக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் இதுதொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
previous post