வீரவநல்லூர், ஜூலை 27: சுத்தமல்லி அருகே சிறுமியிடம் சில்மிஷம் ெசய்த தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். சுத்தமல்லி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் தமிழ்பாண்டி (50), கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி வழக்குபதிந்து தமிழ்பாண்டியை கைது செய்து பாளை சிறையில் அடைத்தார்.
சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளி போக்சோவில் கைது
97
previous post