தேனி, நவ. 30: கம்பத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த சையது அபுதாகிர் (39) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் அபுதாகிர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது அரசு தரப்பில் வக்கீல் விவேகானந்தன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்ட அபுதாஹிர் குற்றவாளி என அறிவித்து அவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தும் அபராத தொகையை செலுத்து தவறினால் கூடுதலாக இரண்டு மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் மீத தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்பீடு செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.