அவிநாசி, ஜூன்28:அவிநாசி சிந்தாமணி திரையரங்கு பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வருபவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடிச்சித்தூர் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(33). கட்டடத் தொழிலாளி. இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை நேற்று கைது செய்தனர்.