வருசநாடு, ஆக. 12: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மலர்க்கொடி போலீசில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் மாப்பிள்ளை உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதேபோல தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, வருசநாடு பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபருடன் ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் மலர்கொடி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் மாப்பிள்ளை உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.