காரைக்குடி, ஜூன் 3: காரைக்குடியில் ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வக்பு வாரிய சேர்மன் நவாஸ்கனி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காரைக்குடியில் உள்ள ஐக்கிய ஜமாத் நிர்வாகம் 9 பள்ளிவாசல் நிர்வாகிகளால் தேர்வு செய்யப்படும். இந்த 9 பள்ளிவாசல்களையும் ஆய்வு செய்து விட்டு புதிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக பள்ளிவாசல்களை ஆய்வு செய்ய வந்துள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு இயற்றகூடிய சட்டங்களுக்கு எல்லாம், முதல் குரல் கொடுக்க கூடியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிறுபான்மை மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசாக திமுக தலைமையிலான அரசு உள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு அரணாக உள்ள அரசு திமுக தான். 2026ல் திமுக தலைமையிலான ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதில் சிறுபான்மை மக்கள் தெளிவாக உள்ளனர். அதிமுக வை இனி சிறுபான்மை மக்கள் நம்பமாட்டர்கள் என்றார். வக்பு வாரிய உறுப்பினர்கள் சமது எம்எல்ஏ, டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.