Monday, December 11, 2023
Home » சிறிய அளவில் ஜவுளிப்பூங்கா அமைக்க ₹2 கோடி நிதியுதவி

சிறிய அளவில் ஜவுளிப்பூங்கா அமைக்க ₹2 கோடி நிதியுதவி

by Francis

 

கிருஷ்ணகிரி, அக்.27: கிருஷ்ணகிரியில், சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பாக மாவட்ட ஜவுளித் தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், துணிநூல் துறை சார்பாக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைத்தல் தொடர்பாக, மாவட்ட ஜவுளித் தொழில்முனைவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், வருகிற நவம்பர் 3ம் தேதி நடை பெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு ₹2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும்.
இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா, குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

சிறிய ஜவுளிப் பூங்காவின் அமைப்பு உரிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். அதன்படி, நிலம், உட்கட்டமைப்பு வசதிகள் (சாலைவசதி, சுற்றுச்சுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர்விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலைத் தொடர்பு வசதி போன்றவகைள்). ஆய்வுக்கூட்டம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்க வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள். உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள். இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம்-636 006. தொலைபேசி எண்.0427-2913006 என்ற முகவரியை அணுகலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?