காவேரிப்பட்டணம், ஆக.30: ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார் திருமணம் மற்றும் வளரிளம்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆசிரியை கோமதி முன்னிலை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு ஒருங்கிணைப்பாளர் வானதி வரவேற்று பேசினார். மருத்துவர் இவாஞ்சலின் பங்கேற்று, சிறு வயது திருமணம் பற்றியும், வளரிளம்பெண்கள் தங்களை எப்படி சமூகத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விளக்கி கூறினார். மேலும், டாக்டர் சண்முகம் உள்ளிட்டோர் அறிவுரை வழங்கி பேசினர்.
சிறார் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
previous post