ஓசூர், நவ.20: ஓசூர் மாநகராட்சியில் பொதுமக்கள் வீட்டுவரி, சொத்துவரி உள்ளிட்ட நிலுவை வரியினங்களை செலுத்த வரும் 22ம்தேதி 3 இடங்களில் சிறப்பு வரிவசூல் மேளா நடைபெறுகிறது. ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகள். வணிக வாளாக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சொத்துவரி சம்மந்தமாக புதிய வரி விதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரிவிதித்தல் தொடர்பாகவும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவை செலுத்த வருகிற 22ம்தேதி புதிய பஸ் நிலையம், ராமநாயக்கன் ஏரி மற்றும் உழவர் சந்தை அருகிலுள்ள வரிவசூல் மையத்தில் சிறப்பு வரிவசூல் மேளா காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறப்பு வரிவசூல் மேளா
0
previous post