ராமநாதபுரம், ஆக.3: ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில், மாவட்ட கூட்டுறவு துறையின் கண்காணிப்பு அலுவலர் ஜே.பழனிஸ்வரி தலைமையில், கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய வங்கி பணியாளர்களுக்கு சிறப்பு திறனாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து காட்டூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நீதித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்கம், பரமக்குடி கூட்டுறவு நகர வங்கி மற்றும் கமுதி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவைகளை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மண்டல இணைப்பதிவாளர்- ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர், சரக துணை பதிவாளர்கள் (ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி), மத்திய வங்கி பொதுமேலாளர், துறை அலுவலர்கள் மற்றும் மத்திய வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.