மாருதி சுசூகியின் சியாஸ் காரின் டூயல் டோன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது சுமார் ரூ.11.14 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.12.34 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பலேனா, எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களை மேம்பட்ட அம்சங்களுடன் வெளியிட்ட மாருதி நிறுவனம், தற்போது சியாஸ் டூயல் டோன் வேரியண்ட்டை வெளியிட்டுள்ளது. சிவப்பு, சாம்பல் மற்றும் பிரவுன் நிறமும் கருப்பு நிற கூரையும் இணைந்த 3 நிற கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டூயல் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார், ஹில் அசிஸ்ட் உட்பட 20 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்-ல் 103 பிஎச்பி பவரையும், 4,400 ஆர்பிஎம்-ல் 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்….