ஓசூர், ஜூன் 10: ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சி சிச்சுருகானப்பள்ளி கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.48 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, கொடியாளம் கிராமத்தில் சிமெண்ட் சாலை மற்றும் அங்கன்வாடி மையம், கொத்தப்பள்ளி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடந்தது. இதில், திமுக மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் சம்பத்குமார், சேகர், ராஜப்பா, சுரேந்தர், சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
0
previous post