விருதுநகர், மே 26: விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சென்னையில் ஜூலை 23 காலை 10 மணி முதல் ஜூலை 26 காலை 10 மணி வரை 72 மணி நேர உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஜூலை 23, 24 மற்றும் 25 தேதிகளில் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது, மாவட்ட தலைநகரங்களில் மே.25ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவெக்கப்பட்டது.
ஜூன் மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, ஜூலை 1 முதல் 15 வரை ஆசிரியர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்திப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன், மாநில தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாநில ஆலோசகர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.