சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவ-மாணவியர் எழுதி வருகின்றனர். இதையடுத்து, 10ம் வகுப்பு விடைத்தாள் தேர்வுகளை திருத்துவதற்காக, மிகவும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்களை நியமித்து, மாணவர்களுக்கான மதிப்பெண்களை மிகச்சரியாக மதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதனால், தரமான முறையில் விடைத்தாள் திருத்தப்பட உள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் பாட விடைத்தாள்கள் நல்ல தரமுடன் மதிப்பீடு செய்யப்படும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கூடுதல் தலைமை தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி, பாடங்களில் வல்லுநர்களாக உள்ளவர்களை நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மேற்கண்ட அறிவியல் சமூக அறிவியல் மதிப்பீட்டாளர்களையும் தங்களுடன் உதவிக்கு வைத்துக் கொள்வார்கள். இந்த மதிப்பீட்டு பணிகள் தேர்வுகள் முடிந்த 10 அல்லது 15 நாட்களுக்கு பிறகு தொடங்கும். ஒவ்வொரு நாளும் மதிப்பீட்டாளர்கள் முக்கிய பாடங்களில் தலா 20 விடைத்தாள்களை மட்டுமே திருத்துவார்கள். மற்ற பாடங்களில் தலா 25 தாள்கள் திருத்துவார்கள். ஒரு மைய கண்காணிப்பாளர், 4 தலைமை தேர்வு அதிகாரிகள், 20 மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை பரிசோதிப்பார்கள். …