ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அருகே ரூ.6.50 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டிடம் ஓர் ஆண்டாகியும் திறக்கப்படவில்லை. அதை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அருகே உள்ள சின்ன நாகபூண்டி அருந்ததியர் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2022-23 நிதி ஆண்டில் பிரதம மந்திரி முன்னோடி கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
மேலும், இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை திறந்து பயன்பாட்டிற்கு கொண்ட வர கோரிக்கை வைத்தும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அருந்ததியர் சமுதாய மக்களின் கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.