நிலக்கோட்டை, மே 31: சின்னாளபட்டியில் சாத்தாவுராயர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தாரை, தப்பட்டை மற்றும் வானவேடிக்கை முழங்க சுவாமி வீதிவுலா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன.பின்னர் ஏராளமான பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், மாவிளக்கு, பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.