சின்னமனூர், செப். 3: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் குச்சனூர் பேரூர் திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேரூர் திமுக செயலாளர் திலிப்குமார் தலைமை வகித்தார். சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், அவை தலைவர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் எம்பி பங்கேற்றார்.
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா, முப்பெரும் விழா சென்னையில் வருகிற செப்.17ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேனி வடக்கு மாவட்ட பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முப்பெரும் விழாவை சிறப்பாக நடந்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு திமுக அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் திருக்கண்ணன், செந்தில், மாவட்ட பிரதிநிதி சுருளி, முன்னாள் சேர்மன் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.