மூணாறு, ஜூன் 24:மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பண மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியிருந்தது. இதை தொடர்ந்து உள்ளாட்சி துறை விஜிலன்ஸ் பிரிவினர் கடந்த தினம் ஊராட்சியில் சோதனையிட்டனர். அதில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு மருந்து, காலணிகள் வாங்கியதில் முறையாக டெண்டர் விடாமலும், வருடாந்திர திட்டத்தில் உட்படுத்தாமலும் அவற்றை நேரடியாக வாங்கியதாக கூறி போலி ரசீதுகள் வைக்கப்பட்டு ரூ.1,98,900 மோசடி நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக உதவி செயலாளர் பனேஷ்கான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.