குடியாத்தம், ஆக.2: குடியாத்தம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(50). குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா(37). இவர்கள் இருவரும் காமராஜர் பாலம் அருகிலுள்ள சினிமா தியேட்டரில் வாட்ஜ்மேன்களாக வேைல செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு இருவரும் பணியில் இருந்தபோது, அங்கு போதையில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், தியேட்டர் கேட்டை திறந்து உள்ளே விடு, டிக்கட் இல்லாமல் சினிமா பார்க்க செல்ல வேண்டும் எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கேட்டை திறந்து விட மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வாட்ஜ்மேன்கள் கோபி, பாட்ஷா ஆகியோரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமா தியேட்டரில் 2 வாட்ஜ்மேன்களுக்கு கத்திக்குத்து குடியாத்தத்தில் பரபரப்பு
62