நன்றி குங்குமம் டாக்டர்ஜப்பானியர்களின் அறிவுத்திறனையும், உழைப்பையும் உலகமே பார்த்து வியந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஜப்பானியர்களுக்கோ இந்தியாவின் மீது அடங்காத பிரமிப்பு. காரணம், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவம்.‘நோய் கண்டறிவது, அதனை குணப்படுத்துவது, எதிர்காலத்தில் வராமல் தடுப்பது போன்றவற்றை மிகவும் சிறப்பாகக் கையாளும் மருத்துவமாக சித்த மருத்துவம் இருக்கிறது’ என்று புகழ்கிறார்கள் ஜப்பானியர்கள். இதனால் சித்த மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள சமீபத்தில் தமிழகத்துக்கும் ஜப்பானியர்களின் குழு ஒன்று வந்துள்ளது.புதுவை மாநிலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கடந்த 32 ஆண்டுகளாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தமிழ்த்தொண்டு மற்றும் ஆன்மிக தொண்டாற்றி வருகிறார். இவரின் உதவியுடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்கா யூகி கோஷி என்பவர் தமிழ் மந்திரங்கள், தமிழ் சித்தர்களின் ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்று சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றி அறிந்துள்ளார். இதனால் மேலும் ஆர்வமான அவர், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளை ஜப்பான் நாட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொருட்டு தன்னுடைய குழுவினருடன் இந்தியா வந்துள்ளார். இவர்கள் சித்த மருத்துவத்தை உருவாக்கிய பல சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று வர ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல சித்தர்கள் வசித்த இடங்களுக்குச் சென்று அவர்களின் வாழ்க்கை முறையையும், மருத்துவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ;இந்த ஜப்பானியர்களின் குழு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சின்னப்பரூர் கிராமத்தில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கோரக்கரின் சித்த மருத்துவ ஆற்றல் மற்றும் தொண்டுகள் பற்றி கேட்டு மேலும் வியப்படைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றியடைந்தபிறகு, ஜப்பானில் முதன்முறையாக 100 இடங்களில் கிளினிக்குகளும், 10; இடங்களில் பெரிய மருத்துவமனைகள் அமைக்கவும் திட்டமாம். நம் பெருமை நமக்குத் தெரிகிறதோ இல்லையோ, மற்றவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது!;- கௌதம்
சித்த மருத்துவத்தை அறிய தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஜப்பானியர்கள்!
96
previous post