மதுராந்தகம்: சித்தாமூர் ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் கொளத்தூர் கிராமத்தில் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மேலும், ஒன்றிய செயலாளர் சிற்றரசு அனைவரையும் வரவேற்றார். இதில், ஒன்றிய நிர்வாகிகள் முரளி, நிர்மல்குமார், ஜெயந்தி, ராமணய்யா, ஐயப்பன், குமரேசன், விஜயின், பிரேமா சங்கர், தீபா முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுவையில், 18 வயது இளம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஊராட்சிகள் தோறும் 50 சதவீதம் வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். ஒரு வாக்கு சாவடி மையத்தில் குறைந்தது நூறு ஓட்டுகள் அதிகம் பெற்று இருக்க வேண்டும். ஒன்றிய அணிகளில் இளைஞர்களுக்கு பதவி வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் இனியரசு, மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், கவுன்சிலர்கள் ஜீவா பூலோகம், இனியமதி கண்ணன், சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.