பல்லடம், ஆக.31: பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்லடம் ஒன்றியம் சித்தம்பலம் ஊராட்சியில் ரூ.31 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. புதிய கட்டிடத்தை சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கோவை காமாட்சிபுரம் ஆதினம் பஞ்சலிங்கலிங்கேஸ்வசுவாமிகள், ஒன்றிய திமுக செயலாளர்கள் நா. சோமசுந்தரம் (பல்லடம் கிழக்கு), பெ.அசோகன் (பெங்கலூர் மேற்கு), ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தேன்மொழி (பல்லடம்),வக்கீல் எஸ்.குமார் (பொங்கலூர்), கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கா. வீ.பழனிசாமி, பல்லடம் முன்னாள் நகர மன்ற தலைவர் பி.ஏ.சேகர், முன்னாள் நகர திமுக செயலாளர் விமல் பழனிச்சாமி, பல்லடம் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சாமிநாதன்,
ஒன்றிய துணைச் செயலாளர் ஆட்டோ குமார், சசிகுமார் மாவட்ட பிரதிநிதி அன்பரசன், துரைமுருகன்,ஒன்றிய பொருளாளர் டி.குமார், முன்னாள் பூமலூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஆறுமுத்தப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்லதுரை, இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.