சென்னை, ஜூன் 20: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்த புதுமையான மற்றும் முன்மாதிரியான பணிகளை அங்கீகரிக்க நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ‘டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருதுகள்’ வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், 2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த டிஜிட்டல் கட்டணச் செயல்திறனுக்காக, டிஜிட்டல் கட்டண விருதுகளை வென்றவர்களில் ஒன்றாக சிட்டி யூனியன் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருதைப் பெற்றார். மேலும், தனியார் துறை வங்கிகளில் 2வது இடத்திற்கான விருதை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 1904ம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வங்கி, தமிழ்நாட்டில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், இந்த வங்கி தேசத்திற்கு 120 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 880 கிளைகளையும், சுமார் 1767 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. 31.03.2025 நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ரூ.116,592 கோடி. 2024-25 நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,124 கோடி.
சிட்டி யூனியன் வங்கிக்கு சிறந்த டிஜிட்டல் கட்டண சேவைகளுக்கான விருது
0
previous post