சிங்கம்புணரி, அக். 21: சிங்கம்புணரி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பாக கலைத் திருவிழா நிகழ்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, தலைமை வகித்தார். துணைத் தலைவர் இந்தியன் செந்தில் அவைத் தலைவர் சிவக்குமார், வட்டார கல்வி அலுவலர் இந்திராதேவி குத்து விளக்கேற்றி நிகழ்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள், மற்றும் படைப்பு திறன்களை வெளிப்படுத்தினர். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் காளாப்பூர் அரச உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி, ஆசிரிய பயிற்றுநர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.