சிங்கம்புணரி, மே 9: சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மேகங்கள் மழை சாரலுடன் போக்கு காட்டி வந்தது. இதனால் நெல் கடலை தோட்ட பயிர்கள், கோடை விவசாயம் செய்த விவசாயிகள் தண்ணீர் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் சிங்கம்புணரி நகரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது, இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் மேலூர் சாலையில் மழைநீர் கடைகளில் முன்பு தேங்கியது.