செய்முறை குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து பின்பு பட்டை பொடி, கிராம்பு பொடி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி அதில் சிக்கனை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின் தயிர், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் பிரியாணி மசாலாவை வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன் அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடம் வைக்கவும். இப்பொழுது கமகமக்கும் சுவையான சிக்கன் பிரியாணி தயார். இதனுடன் சிக்கன் குருமா மற்றும் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.குறிப்பு: பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து பின் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி லேசாக வதங்கியவுடன் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.
சிக்கன் பிரியாணி
63
previous post